உன் கூந்தல் சாட்டையால்
என் இதயம் கிழித்தவலே.......!
உன் நெற்றியில் விளையாடும்
வியர்வை துளியாய் அவனோ நான்....!
உன் கண்களில் கைது செய்து வைத்திருக்கும்
சிறுபிம்பம் அவனோ நான்....!
உன் மூக்கின் வழி நுழையும்
சுவாசமாய் அவனோ நான்.......!
தொங்கவிடாதே உன் காதில் அந்த ஜிமிக்கியை
நீ பேசும் போது எல்லாம் உன்னை தொட்டு
பொறாமை பட வைக்கிறது என்னை.....!
இதழை சுழிக்காதே
அதில் விழுந்த என் இதயம் தெரிகிறது.....!
நீ சிரிக்கும்போது எல்லாம்
தெரிவது உன் பல்வரிசை மட்டும் அல்ல
அதில் பட்டு தெறிக்கும் என் கவிதை சொற்களும் தான்.....!
நான் கவிதை எழுதுவதே
உன் நாக்கில் விளையாட துடிக்கும்
என் சொற்களின் தவம்.......!
பிரம்மன் படைத்த ஒன்றில் மிகவும்
புனிதம் உன் கழுத்து
இதோ என் மூச்சு காற்று பட துடித்து கொண்டிருகிறது.....
காமத்தின் முதல் புள்ளி.....
உன் கழுத்து......!
நிலச்சரிவில் பிழைத்தவர்கள் ஏராளம்
அனால் உன் துப்பட்டா சரிவில்
சரிந்து புதைந்த இதயங்கள் எத்தனையோ....!
இதோ அதில் நானும் ஒருவன் ......!
நீ செல்லமாய் என்னை அடிக்க
ஓங்கும் கையில் தான் எத்தனை விதமான
உணர்சிகள்....!
இதழில் முத்தமிடும் போது
தானாகவே உன் கைகளின் விரல்கள்
என் பின் முடியை கோதும்....!
உன் விரல்களின் இடுக்கில் அடிகடி மாட்டி கொள்ள
துடிக்கிறது என் இதயம்.....!
தாய்மையின் உயிர்நாடி.....
பெண்மையின் மேன்மை ......
புதிதாய் உயிர் கொடுக்கும்
பெண்மைக்குள் இருக்கும் பிரம்மா.....
அதை போற்றுகிறேன்
ஒரு மனிதனாய்.....!
உன் தொப்புள்கொடி
உன் உடை கூட நிற்பதில்லை
உன் இடையில்
ஊசிமுனை இடைஅழகி .....!
நீ நடக்கும் நடையில்
கிடைக்கும் இடைவெளியில்.......!
மடிந்து கிடக்கிறது
என் இதயம்.....!
அதை எடுத்து வைத்துகொள்.....!
உன் பாதங்களில் பட்டுத்தெறிக்கும்
சிறு தூசியாய் நான் இருக்க வேண்டாம்...!
உன் பாதங்களில் ஒட்டிக்கிடக்கும்
கோடித்தூசியில் நானும் ஒருவனாய்
இருக்கவே ஆசைபடுகிறது மனது......!
மொத்தத்தில் பிரம்மனால்
நூறு கோடி அழகு பெண்களை
அழித்து உன்னை சிற்பமாய்
ஓவியமாய் வடித்துவிட்டு
அவன் மடிந்திருப்பான் போலும்
உன்னைபோல் இன்னொரு
பெண்ணை வடிக்க முடியாமல்......
அவனுக்கென்ன மடிந்துவிட்டான்.......
உன் அழகில் வீழ்ந்து
எழ முடியாமல் தவிக்கும்.....
எத்தனையோ ஆண்களில்
உன்னை கவர்ந்த கள்வனாய்
உன் இதயத்தில் இருக்கும்
வரம் போதும் எனக்கு.....!

No comments:
Post a Comment